jump to navigation

கடைசியில் நிற்கிறேன் ஜூன் 19, 2006

Posted by padhu in அனுபவம் / நிகழ்வுகள்.
trackback

குறை தீர்ந்த பக்தர்கள் உன்முன்னே அலைக் கூட்டம்
குறை தீர வந்தவர் சிலர் பின்னே நான் மட்டும்
மறைவாய்க் கடைசியில் நிற்கிறென்.

மனம் மகிழ ஒரு சோதனையா – எனக்கு
தினம் நெகிழ ஒரு சாதனையா

இறக்கி வைக்க வேண்டாத இன்பச்சுமையா – இவன்
இறக்கை வாய்க்க வேண்டாத தேவப்பதுமையா

வேகங் கெடுத்தாண்ட நற்பிறவியா – என் மகன்
மேகந் துளைத்துவந்த துறவியா

ஆற்றல் அருள வேண்டி நிற்பதா – இல்லை
ஏற்றம் தரும் அன்பு போற்றி உரைப்பதா

ஒடுங்கி நின்ற குசேலன் போல – புரியாமல்
ஒதுங்கி நான் கடைசியில் நிற்கிறேன்

பி.கு:
என் மகனுக்கு டௌன்-ஸின்ட்ரோம் என்ற மரபணுவியல் கோளாறு இருக்கிறது. அது அவனுடைய மன வளர்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் பாதிக்கிறது. ஆனாலும் அவன் காட்டும் அன்பினால் அவையெல்லாம் ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. இருந்தாலும் இந்த நல்ல நெஞ்சங்கள் புத்திக்கூர்மையும் கொண்டிருப்பதுதான் நியாயம் என்று அடியேனுக்குப் படுகிறது. அவனுக்கு மொட்டையடிக்க இந்த வாரம் ஊருக்குப் போகிறேன். கடவுளிடம் என்னக் கேட்பது என்ற குழப்பத்தில் எழுதப்பட்டது இது.

Advertisements

பின்னூட்டங்கள்»

1. மணியன் - ஜூலை 8, 2006

இன்று துளசிதளம் மூலம் இங்கு வந்தேன். உங்கள் குழந்தை நலம்பெறவும் உங்களுக்கு மன உறுதியும் நிம்மதியும் கிடைக்க நானும் நாளும் வேண்டுவேன்.

2. revathinarasimhan - ஜூலை 18, 2007

நானும் துளசிதளம் மூலம் தான் வந்தேன்.

உங்கள் நலனுக்காகவும் உங்கள் பையன் நலனுக்காகவும் பிரார்த்திக்கிறேன்.
என் நெருங்கிய உறவினரின் முதல் இரு …ஒரு பையன்,ஒரு பெண்….முறையே 47வயது, 45வயது வாரிசுகளும் மனவளர்ச்சி குன்றியவர்கள். அவரும் முக்கால் முதுமையை நெருங்கிவிட்டார். நாங்களும் இல்லாவிட்டால் இவர்களின் தேவைகளைக் கவனிப்பது யார் என்ற அவர் சோகம் சொல்லி முடியாது.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: